1. ஒரு குழந்தையை முழுமையாகக் கட்டுப்படுத்தி வைக்க தண்டித்தல் முறை முயற்சி செய்கிறது. நெறிப்படுத்தலோ அந்தக் குழந்தையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்து, அக்குழந்தைச் சுய கட்டுப்பாடு கொண்டவராக மாற்ற உதவுகிறது.
ஒரு பாடசாலையில் அங்கிருந்த ஆசிரியர் நிறைய போட்கள் வைத்திருப்பார். தவறு செய்யும் மாணவர்களை அடிக்க மாட்டார், திட்டமாட்டார். தான் வைத்திருக்கும் போட்டில் மார்க்கர் பேனாவில், ‘தாமதித்து வருபவன்’, ‘பொய்யன்’, ‘வகுப்பில் பேசுபவர்’, ‘பேனா திருடி’ என்றெல்லாம் எழுதி சம்பந்தப்பட்ட மாணவர்களின் கழுத்தில் மாட்டிவிடுவார். அன்றைய நாள் முழுதும் அவர்கள் அந்த போட்டோடு இருக்க வேண்டும். இது உண்மையில் நடந்த சம்பவம். மனஉளைச்சல் தாங்காமல் மாணவர்களில் ஒருவர் தன்னை மாய்த்துக்கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பத்திரிகை செய்தி ஆனது. “நான் அந்த மாணவனை எந்தவிதத்திலும் (உடல் ரீதியில்) காயப்படுத்தவில்லையே” என்றார் அந்த ஆசிரியர். குழந்தை அனுபவித்த வலி மனதளவிலானது. அதனால் இதற்கு வலிமை அதிகம். இதற்கும் தண்டனை என்றுதான் பெயர். இது நெறிப்படுத்தல் அல்ல.
2. தண்டித்தல், தான்செய்த தவறை தொடர்ந்து குழந்தைகளை ஞாபகம் வைத்துக்கொண்டே இருக்குமாறு செய்துவிடுகிறது.
நெறிப்படுத்தல் தவறை மட்டும் சுட்டிக்காட்டுவதல்ல... மாற்று வழியை ஒரு குழந்தை தானே தேர்வு செய்து அந்த தவறை நொடியில் கடந்துவிட உதவுவதே ஆகும்.
குழந்தைகளை நெறிப்படுத்துவது என்பது, ‘குழந்தைகள் செய்யும் தவறை ஆசிரியர்கள் செய்யாதிருத்தல்’ என்கிற இடத்தில் தொடங்குகிறது. ‘எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது’ என கட்டளை இடுவதில் ஒன்றுமில்லை. ‘எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது’ என வாழ்ந்து வழிகாட்டுவதுதான் ஆசிரியர்களின் வழி. நல்ல ஆசிரியர் என்பவர் ஆசிரியராய் வாழ்பவர் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

“இதெல்லாம் உன் நன்மைக்காகத்தான்...”
எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியரின் பாணி இது. “உனக்காகத்தான் சொல்றேன்” என தொடங்குவார். “எந்தக் குற்றம் இருந்தாலும் சரி, தண்டனைனு ஒன்று இருக்கணும்... இல்லைன்னா மனசு மறுபடி அலைபாயும்.” என்பார். ‘மாணவர் நன்மைக்காக அவர் தந்த தண்டனை, ‘இனி ஒருபோதும் லவ் பண்ண மாட்டேன்’ என 500 முறை எழுதுவது. இப்படி எழுதிவிட்டால், இனி எந்த மாணவிக்கும் அந்த மாணவன் லவ் லெட்டர் தரமாட்டான் என்பது அவரது கணிப்பு. அந்த மாணவன், தன் வயதுக்கு இப்படியான ஒரு செயலில் இறங்கியிருக்கக்கூடாது தான். ஆனால் இந்த 500 முறை எழுதும் வலி அவனது மனதிலும், உடம்பிலும் செயலிலும் உலகைக் குறித்த அவனது பார்வையிலும் எத்தகைய முரண் முறிவை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இது நெறிப்படுத்தல் அல்ல.

3. தண்டித்தல் ஒரு குழந்தை தனது சுயமரியாதையை இழந்து கூனிக்குறுகிப் போக வைக்கிறது. நெறிப்படுத்தலோ நம்பிக்கை அளித்து அச்செயலின் பின்விளைவுகளை ஆராய்ந்து தவறைக் கைவிட உதவுகிறது. மனவலியும் சுயவெறுப்பும் கொண்ட ஒரு குழந்தை உடனடியாக அந்தக் குறிப்பிட்ட ஆசிரியரிடமிருந்து மனரீதியில் விலகிவிடுகிறது. அவரைப் பழிவாங்கத் துடிக்கிறது. அல்லது, அவரது நடவடிக்கைகள் அனைத்தையுமே வெறுக்கிறது. இதன்மூலம் மாணவரின் மனம் அந்த ஆசிரியரின் பாடத்தையும் வெறுத்து, தனக்குத்தானே பெரிய தீங்கை ஏற்படுத்திக்கொள்கிறது.
4. தண்டித்தல் ஒருவகை தொடர் வன்முறையாகவும் வெறுப்பை அதிகப்படுத்துவதாகவும் உள்ளது. நெறிப்படுத்தல் நபர்கள் மீது கவனம் கொள்ளாமல் நடத்தையைச் சரிசெய்வதில் கவனம் கொள்வதால் இந்த ஆபத்து அதில் இல்லை. குழந்தைகளைத் தண்டிக்கும்போது, குழந்தையின் தவறான நடத்தையைக் கவனப்படுத்தாமல் நாம் குழந்தை மீது கவனத்தைக் கொள்கிறோம். தவறான நடத்தையை மாற்ற வழிகாட்டுவதில்லை. மாறாக, நடந்து முடிந்துவிட்ட ஒரு சம்பவத்திற்கு நீதி கற்பிப்பதாக நினைத்து குழந்தை மீது பாய்கிறோம். இதனால் மறுமுறை அச்சம்பவம் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தண்டிப்பவர் தலைமறைந்ததும் அது தொடரும். ‘அதைச் செய்யக்கூடாது, தவறு’ எனக் குழந்தை உணர்வதற்குப் பதில், ‘அந்த ஆசிரியர் முன் அப்படிச் செய்யக்கூடாது’ என்ற முடிவுக்கு வருகிறது.
5. தண்டித்தல் தவறான நடத்தையை சரிசெய்வது இல்லை. மாறாக அதைத் தண்டிப்பவர் பார்க்கும்போது தவிர்க்கப் பழக்குகிறது. தவறைத் தற்காலிகமாகவே நிறுத்தும். நெறிப்படுத்துதல் அந்த நடத்தையினால் வரும் தீங்குகளைப் பேசி உணரவைத்து மீண்டும் நிகழாமல் தடுத்தலாகும்.
6. தண்டிப்பது, சமயத்தில் குழந்தையின் தவறைவிட பெரிய குற்றமாகி விடுகிறது. பாரபட்சம் பார்க்கத் தூண்டுகிறது. நெறிப்படுத்தல் தவறுகளை திருத்தும் கலந்தாலோசிப்பாக (Counselling) இருப்பதால் போற்றத்தக்க செயல்பாடாக ஏற்கப்படுகிறது. குழந்தைகளை நெறிப்படுத்துவது ஆசிரியருக்கும் மாணவருக்கும் சிறந்த நிரந்தர பலன்களைத் தரமுடியும். வகுப்பறை அமைதியை, நல்லுறவைத் தூண்ட முடியும். எப்போதும் குறைகளைச் சுட்டிக்காட்டாமல், நிறைவான ஒரு செயல் நடக்கும் சமயத்தில் எல்லாம் பாராட்டி, அக்குணத்தையும் நடத்தையையும் தக்க வைப்பதே நெறிப்படுத்தல் ஆகும்.
“நம் கல்வி உருவாக்க வேண்டியது, அஞ்சி ஒளியும் பிரஜையை அல்ல... வலிமை, சுயகட்டுப்பாடு, ஆளுமை, தலைமைப் பண்பு மிக்க இளைஞர்களை..!”
- டாக்டர் அப்துல்கலாம் -
- டாக்டர் அப்துல்கலாம் -
“நமது வகுப்பறைகளின் ரத்த ஓட்டமே குறும்புக்கார குழந்தைகள்தான்.!” - கல்வியாளர் யஷ்பால் -
No comments:
Post a Comment