Wednesday, December 28, 2011

இது எப்படி இருக்கு?

A: For Apple
B: For Bluetooth
C: For Chat
D: For download
E: For Email
F: For Face Book
G: For Google
H: For Hewlettpackard
I: For I phone
J: For Java
K: For Kingston
L: For laptop
M: For Messenger
N: For Nero
O: For Orkut
P: For Picasa
Q: For QuickTime
R: For Ram
S: For Server
T: For Touch screen
U: For USB
V: For VIsta
W: For Wifi
X: For XP
Y: For Youtube
Z: For Zorpia

Sunday, December 18, 2011

ஈமானியப் பலஹீனத்தின் வெளிப்பாடுகள்

அளவில்லா கருணையும் இணை இல்லா கிருபையும் உடைய அல்லாஹ் வின் திரு பெயரால் ஆரம்பம் செய்கின்றேன், எல்லாப் புகழும் அல்லாஹுவுக்கே உரித்தானவை, இன்னும் ரசூலே கரீம் சல்லல்லாஹு அலைஹிவசலம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும், இன்னும் அவர்களைப் பின்பற்றிய அனைவர் மீதும் உண்டாவதாக, ஆமீன் என்று கூறி என்னுடைய சிறிய தொகுப்பை தருகிறேன், இன்ஷா அல்லாஹ்…

முதலில் நம்முடைய ஈமானின் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..

தொழுகையிலும் சரி, அல்லாஹ்வின் திருமறையை ஓதுவதிலும் சரி, சஹாபாக்கள் உணர்ந்த சுவையையும் லயிப்பையும் நாம் எப்போதாவது உணர்ந்த்திருக்கின்றோமா? நம்மில் மிக குறைவானவர்கள் சில நேரத்தில் உணர்ந்திருக்கலாம். ஆனால், இதுபோன்ற கதைகளைக் கேட்டுப் பூரித்துப் போனதைத் தவிர வேறெதையும் காணாதவர்கள் தான் அதிகம்

நாம் தொழுகின்றோம், நோன்பு நோற்கின்றோம், தானம் செய்கின்றோம், ஹஜ் செல்கின்றோம் , சஹாபாக்கள் செய்த எல்லா இபாதத்களிலும் ஈடுபடுகின்றோம். ஆனால், அவர்களது இபாதத்துகளில் காணப்பட்ட ஈரத்தை, பசுமையை நாம் காண்பதில்லை.

நாம் குடும்ப வாழ்கை மேற்கொள்கிறோம். கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றோம். சமூக உறவுகளில் ஈடுபடுகின்றோம். ஆனால், இவற்றை செயல்படுத்துகின்ற போது சஹாபாகளில் காணப்பட்ட அழகையும் நேர்மையையும் நம்மிடம் காண முடியவில்லை.

இப்னு மசூத்(ரலி) அவர்கள் தனது மாணவர்களைப் பார்த்துள் கூறினார்: சஹாபாக்களை விடவும் நீங்கள் அதிகமாக தொழுகையில் ஈடுபடுகின்றீர்கள், நோன்பு நோர்கின்றீர்கள், ஆனால் அவர்கள் உங்களை விட சிறந்து காணப்பட்டார்கள். காரணத்தை வினவியபோது, அவர்கள் உங்களை விடவும் உலகில் பற்றற்றவர்களாக இருந்தார்கள். உங்களை விடவும் மறுமையில் ஆசை வைத்தவர்களாக இருந்தார்கள் என்றார்கள்.

அபூ பக்கர்(ரலி) அவர்களைப் பற்றி சில சலபுகள் கூறுகின்றபொழுது, அபூ பக்கர்(ரலி) அவர்கள் அதிகமாக தொழுகையாலும் நோன்பாலும் எங்களை மிகைக்கவில்லை. மாறாக அவரது உள்ளத்தில் ஆழப் பதிந்த ஈமானால்தான் எங்களை மிகைதிருந்தார் என்றனர்.

எனவே புறச் செயல்களில் பெரிய வேறுபாடு காணப்படாவிட்டாலும் அகச் செயல்களில் வேறுபாடு இருந்திருக்கிறது. அவர்கள் இபாதத்தையும் சரி குடும்ப வாழ்கையையும் சரி சமூக வாழ்கையையும் வியாபாரத்திலும் சரி சுவைத்துச் செய்துருக்கிரார்கள். அதில் அழகும் நேர்மையும் பிரதிபலித்திருகிறது….

சகோதரர்களே இங்கே நம்முடைய நிலையை அலசி பார்க்க வேண்டும்…

ஈமானியப் பலஹீனத்தின் வெளிப்பாடுகள் சில

ஒருவனது செயல்களை வைத்து அவனது ஈமானின் பலம் பலஹீனம் பற்றி அளவிட முடியும். ஈமான் பலஹீனமடையும் போது, அதன் வளிப்பாடுகள் எவ்வாறு இருக்க முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்…

இபாதத்களை அதற்குரிய வடிவில் நிறைவேற்றுவதில் கவனக் குறைவாக இருப்பார். ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாகியே வருவார் அல்லது ஜமாஅத்திற்கு வரவே மாட்டார். சில சமயம் பள்ளிவாசலுக்கு வரமாட்டார். தொழுகைகளிலும் பல எண்ணங்களுடனேயே இருப்பார். இமாம் ஸலாம் கொடுத்தவுடன் தான் சுய நினைவுக்கு வருவார்.

சுபஹ் தொழுகைக்கு உரிய நேரத்தில் எழ மாட்டார். சூரியன் உதித்த பின் எழுந்து கொண்டாலும் அதற்காக கொஞ்சமும் கவலைப்படாமல் சாதாரணமாகவே தனது கடமைகளைச் செய்து கொண்டிருப்பார்..

ஜும்ஆத் தொழுகைக்கு இமாம் மிம்பரில் ஏறிய பிறகே போவார். அல்லது தொழுகைக்காக தக்பீர் கட்டும் நேரத்தில் அவசரமாகப் போய் இணைந்து கொள்வார். நேர காலத்துடன் போனாலும் குத்பாவைக் கேட்பதை விட்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார்..

சுன்னத்தான அமல்களில் ஈடுபாடு காட்ட மாட்டார். அவற்றை விடுவது குற்றமில்லை என இருந்துவிடுவார். கியாமுல் லைல், ழுஹா போன்ற தொழுகையையோ, சுன்னத்தான ஒரு நோன்பு நோர்பதையோ காணவே முடியாதிருக்கும்..

அல்லாஹ்வின் திருமறை ஓதுவதைக் காணமுடியாதிருக்கும். அப்படியே ஓதினாலும் நாவால் மட்டும் தான் உள்ளத்தில் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. சந்தர்ப்ப துஆக்கள் ஒதுபவராக அவரைக் காணமுடியாது. அல்லாஹ் விடத்தில் கையேந்தி துஆக் கேட்கும் பண்பு இருக்காது.

ஈமான் பலஹீனப்படும்போது இவற்றையும் இன்னும் பலவற்றையும் காணலாம். தனிமனிதன் , சமூகம், அரசு எல்லாவற்றிலும் இதன் பாதிப்புகள் இருக்கும். தனிமனிதனோ, சமூகமோ, அரசோ வீழ்வதற்கு இதுவே காரணமாக இருக்கும்.

புகழ் அனைத்தும் அல்லாஹுவுக்கு உரியது, பிழைகள் எதுவும் இருந்தால் அல்லாஹ் என்னை மன்னிபானாக என்று தொகுத்து என்னுடைய இந்த தொகுப்பை நிறைவு செய்கிறேன்..

நன்றி அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் சமத் (நளீமி)

Sunday, December 11, 2011

மறுமை (உலக அழிவு) நாளின் அடையாளங்கள்

நிச்சயமாக என்றொரு நாலாவது இவ்வுலகம் அழியப்போவது நாம் யாவரும் அறிந்த ஒரு விடயம். ஆனால் அதனைப்பற்றி நாம் சிந்திப்பது இல்லை. நாம் வாழும் காலம்வரை நன்மை செய்து வாழ வேண்டும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஆதாரங்களை பார்ப்போம்:-

மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4777, 50

பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 50
குடிசைகள் கோபுரமாகும்

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 7121

விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது ’எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று
விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 59, 6496

பாலை வனம் சோலை வனமாகும்

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது

நூல் : முஸ்லிம் 1681

காலம் சுருங்குதல்

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)
ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு
விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.

நூல் : திர்மிதீ 2254)

கொலைகள் பெருகுதல்

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்
(ஸல்) கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்
நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல்: புகாரி 1036, 7121

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

நெருக்கமான கடை வீதிகள்

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: அஹ்மத் 10306

பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

ஆடை அணிந்தும் நிர்வாணம்

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.

நூல் : முஸ்லிம் 3971, 5098

உயிரற்ற பொருட்கள் பேசுவது

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.

நூல்: அஹ்மத் 11365

பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்
வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: அஹ்மத் 1511

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

சாவதற்கு ஆசைப்படுதல்

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்
செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.

நூல்: புகாரி 7115, 7121

இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக
முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: புகாரி 3609, 7121
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

‘உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3456, 7319

யூதர்களுடன் மாபெரும் யுத்தம்

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது ’முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.

நூல்: புகாரி 2926

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ’கால்கள்
சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.

நூல் : புகாரி 5179

யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.

நூல் : புகாரி 7119

கஹ்தான் இன மன்னரின் ஆட்சி

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

நூல் : புகாரி 3517, 7117

அல்ஜஹ்ஜாஹ் மன்னர்

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது
நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5183

எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்
பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5191

செல்வம் பெருகும்

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். ’நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424

மாபெரும் யுத்தம்

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்
ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே
வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12
ஆயிரம் பேர் இருப்பார்கள்.

நூல் : புகாரி 3176

மதீனா தூய்மையடைதல்

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 2451

அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 3546

மாபெரும் பத்து அடையாளங்கள்

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து
விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 – (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),

நூல்: முஸ்லிம் 5162.

புகை மூட்டம்

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!
அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும்.

(அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்
பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.
மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)

நூல்: தப்ரானி

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)

ஈஸா(அலை) அவர்களின் வருகை

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(அல்குர்ஆன் 43:61)

மூன்று பூகம்பங்கள்

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

பெரு நெருப்பு

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்
செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

Tuesday, December 6, 2011

விரல் ஆட்டுகிற அன்பர்களுக்காக! நீங்கள் ஆட்டுவது சரிதானா? என்று சற்று சிந்தியுங்கள்

தாஸூஆவில் ஓர் அஸ்தமனம்.

கீரனூரிஎன்ற பெயரை அறியாத தமிழ் பேசும் முஸ்லிம்கள் யாரும் இருக்க மாட்டார்கள். என்று சொன்னால் அது மிகையாகாது.

தென்னிந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கீரனூர் எனும் ஊரில் 13-06-1944 (ஹிஜ்ரி 1363 ஜமாதுல் ஆகிர் பிறை 20) செவ்வாய்க் கிழமை செல்வச் செழிப்போடு வாழ்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் லதீப் அவர்களின் மகனாக ஹழ்ரத் அவர்கள் பிறந்தார்கள்.

67 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்து 16-12-2010 (ஹிஜ்ரி 1432 முஹர்ரம் பிறை 09) வியாழக் கிழமை மறைந்த அறிவுச் சூரியன் கலீல் அஹ்மத் கீரனூரி ஹழ்ரத் அவர்கள் சமுதாயத்திற் விட்டுச் சென்ற படிப்பினைகள் ஏராளம். அவர்கள் தமது வாழ்வின் அந்திம காலத்தில் எழுதி 2009 ஆகஸ்டில் வெளியிட்ட நினைவுகள்என்ற நூலைப் படித்தவர்கள் அவர்களைப் பற்றி நன்றாகவே புரிந்திருப்பார்கள்.

தஃவத்துடைய உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தந்தையின் கண்டிப்பும் தாயின் பாசமும் கலந்த ஒரு நல்ல குடும்பச் சூழலில் வளர்க்கப்பட்ட ஹழ்ரத் அவர்கள் 7 வயதிலேயே குர்ஆனை முழுமையாக ஓதி முடித்தார்கள்.

1956 ஆம் ஆண்டு இறுதியில் தனது 12 வது வயதில் லால்பேட்டை மன்பஉல் அன்வார் அறபுக் கல்லூரியில் சேர்ந்து ஏழாண்டுகள் அங்கு கல்வி பயின்றார்கள். அதன் பிறகு பெங்கழூரிலுள்ள ஸபீலுர் றஷாத் அறபுக் கல்லூரியில் உர்து மற்று பார்ஸீ மொழிகளைக் கற்றார்கள். 1964 ஆம் ஆண்டு தாருல் உலூம் தேவ்பந்தில் ஹதீஸ் கலையைக் கற்றுக் கொண்டிருக்கும் போதே திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

திருச்சியில் எட்டு வருடங்கள் உஸ்தாதாகப் பணிபுரிந்தர்கள். இந்தக் காலப் பகுதியில்தான் அவர்களுடைய திருமணமும் நடந்தது. 5 குழந்தைகள் (மூன்று ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும்) திருச்சியைத் தொடர்ந்து ஆறு வருடங்கள் ஈரோடு தாவூதிய்யா அறபுக் கல்லூரியில் தீன்பணி செய்தார்கள்.

05-09-1979ல் பலரின் வேண்டுகோளுக்கிணங்க தாருல் உலூம் யூசுபிய்யாவில் காலடி எடுத்து வைத்தார்கள். அன்று முதல் மௌத்துவரை மொத்தம் 31 வருடங்கள் அங்கேயே அதிபராகப் பணியாற்றினார்கள். யூசுபிய்யா ஹழ்ரத் அவர்களின் கனவுக் கோட்டை. யூசுபிய்யா வளர தன்னையே உரமாக்கினார்கள். ஒரு சிறிய அறைக்குள் இருந்து கொண்டு முழு உலகையும் பற்றி சிந்தித்தார்கள். மத்ரசாவின் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தர்கள். முதாலஆவுக்காக (சுயமாகக் கற்றல்) மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தமை, நாளை நடக்க இருக்கும் பாடத்தை இன்றே மாணவர்கள் சுயமாக முடிந்த வரை படித்து விளங்கிக் கொண்டு மறு நாள் பாடத்தில் தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்வது என்ற ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியமை போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.

நான் பெற்ற பிள்ளைகள் எனது உடலணுக்கள் என்றால் என்னுடைய மாணவர்கள் எனது உயிரணுக்கள்என்று சொல்வார்கள். உண்மையில் அப்படித்தான் நடக்கவும் செய்தார்கள். ஒரு குழந்தையின் மீது தகப்பனுக்கு இருக்க வேண்டிய கண்டிப்பும் பாசமும்தான் அவர்களிடம் மிகைத்துக் காணப்பட்டது. அவர்களைப் பார்த்து மாணவர்கள் பயப்பட்டார்கள் என்று சொல்வது கடினம். மாறாக அவர்களைப் பற்றிய மரியாதை கலந்த ஓர் அச்ச உணர்வு மாணவர்களுடைய உள்ளங்களில் எப்போதும் இருந்தது எனலாம்.

அவர்கள் மாணவர்களுக்குச் சொன்ன புத்திமதிகள் முழு உலகுக்கும் உள்ள புத்திமதிகளே. 200க்கும் மேற்பட்ட பயான்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கேள்வி. விரல்களுக்கு ஈட்டியின் வலிமையுண்டு காது குடைந்து சுகம்காண முயற்சிக்காதீர்கள் சந்திரனைப் பிளக்க முயற்சியுங்கள்என்பார்கள். இறப்பு எழுதியவனுக்குத் தான் எழுத்துக்கல்ல ஆகவே பேனாவின் கழுத்து சுளுக்கும் வரை எழுதுங்கள்என்றார்கள். முதல் நபராக நுழைய வேண்டும் கடைசி நபராக வெயியேற வேண்டும் பள்ளிவாசலுக்கு மட்டுமல்ல நூலகத்துக்கும்தான்என்றார்கள். மாணவர்களே! நீங்கள் நிமிர வேண்டும் கேள்விக்குறியின் முதுகில் மிதித்து அதை ஆச்சரியக் குறியாக நிமிர்த்த வேண்டும்என்பார்கள். இது போன்ற சிதறிய முத்துக்கள் ஏராளம். தென்னிந்திய அறிஞர்கள் ஹழ்ரத் அவர்களை சிந்தனைச் சுடர்என்று மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

ஹழ்ரத் அவர்கள் தீனுக்குச் செய்த சேவைகள் ஏராளம். அனைத்தையும் எழுத முடியாவிட்டாலும் ஒரு சிலதை எழுதித்தான் ஆக வேண்டும். விண்ணியல் அல்லது வானவியல் என்று சொல்லப்படும் கலையில் ஹழ்ரத் அவர்களுக்கு போதிய அறிவும் தேர்ச்சியும் இருந்தது. பொதுவாகவே அவர்கள் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய தகுதியும் தைரியமும் உள்ளவர்களாக ஆலிம்கள் உருவாக வேண்டுமென்று சிந்தித்தவர்கள். இந்த விண்ணியற்கலை சம்பந்தமாக அறபு மத்ரசாக்களில் போதிக்கப்பட்டு வந்த கிதாப்கள் சுமார் எழுநூறு வருடங்கு முன்பு எழுதப்பட்டவை. குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் ஒத்துப் போகக்கூடிய நவீன விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் இத்துறையில் சில கிதாப்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவை மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடிய அமைப்பில் இருக்கவில்லை. எனவே மிக நீண்ட ஆய்வுக்குப் பின்னால் அல் அப்லாக் வல் அவ்காத்என்ற கிதாபை எழுதினார்கள்.

வானியல் தொடர்பான விஞ்ஞான உண்மைகள் - உண்மையிலேயே உண்மையாக இருந்தால் - அவை குர்ஆனுக்கு எவ்வகையிலும் முரண்படாதுஎன்ற கருத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த கிதாபில் விளக்கியிருக்கிறார்கள். இதில் வானவியல் புவியியல் தொழுகை நேரங்களை அறிந்து கொள்ளும் முறை கிப்லாவை அறிந்து கொள்ளும் முறை இரவு பகல் மாற்றங்கள் பற்றியெல்லாம் ஹழ்ரத் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். 1990 களிலிருந்து இதன் கையெழுத்துப் பிரதியை வைத்தே ஹழ்ரத் அவர்கள் பாடம் நடத்தினார்கள். 2000 இல் அது அச்சு வடிவம் பெற்றது. ஹழ்ரத் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே தமிழ்நாடு கேரளா இலங்கை ஆகிய இடங்களிலுள்ள அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் இக்கிதாபு சேர்க்கப்பட்டு விட்டது. இன்று லெபனானில் அச்சாகி அறபு நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அறபியல்லாத ஒருவர் இப்படி ஒரு கிதாபை எழுதியிருப்பதை லெபனான் பதிப்பகத்தார்களே புகழ்ந்திருக்கிறார்கள்.

2001-05-13-15 ஆகிய தினங்களில் அக்குரணை ஜாமிஆ றஹ்மானிய்யாவில் அல் அப்லாக் வல் அவ்காத் கிதாபை பாடம் நடத்தினார்கள். அதில் 250 ஆலிம்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அதற்குப் பிறகு இலங்கையிலிருந்து 15 ஆலிம்கள் யூசுபிய்யா மத்ரஸாவிற்குச் சென்று ஏறத்தாழ பத்து நாட்கள் அங்கு தங்கியிருந்து வானவியல் சம்தமாக ஹழ்ரத் அவர்களிடம் கற்றுக் கொண்டு அதற்கான சான்றிதழ்களையும் பெற்று நாடு திரும்பினார்கள். இதற்கு முன்பு தமிழக ஆலிம்களுக்கும் யூசுபிய்யா மத்ரஸாவில் வானவியல் சம்பந்தமான ஒரு கருத்தரங்கு நடத்தினார்கள். அதில் மூன்று நாட்கள் அல் அப்லாக் வல் அவ்காத் கிதாபை பாடம் நடத்தினர்கள். அதன் மூலம் நிறைய ஆலிம்கள் பயன்பெற்றனர்.

மன்திக் (தர்க்கவியல் கலை) என்றாலே பலருக்கு ஒவ்வாமை. சிலர் அப்படி ஒரு கலை தேவையில்லை என்றும் சொல்வதுண்டு. ஹழ்ரத் அவர்கள் அந்தத்துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அது சம்பந்தமாக அவர்கள் அல்கிஸ்தாஸ் அல்பலாகா என்று இரண்டு கிதாப்கள் எழுதியிருக்கிறர்கள். அதன் கையெழுத்துப் பிரதிகள் சில மத்ரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படுகின்றன. அத்தோடு வாரிசுரிமை சம்பந்தமாகவும் அல் பறாயில் என்றொரு கிதாபையும் எழுதியிருக்கிறர்கள் அது யூசுபிய்யாவில் ஓதிக்கொடுக்கப்படுகிறது. இன்ஷா அழ்ழாஹ் இவை வெகு விரைவில் அச்சாகி வரும்.

தஃவத்துடைய உழைப்பில் தன்னை முழமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டுமென்பதில்லை. உலகில் அதிகமான நாடுகளுக்கு ஜமாஅத்தில் சென்றிருக்கிறார்கள். டில்லி மர்கஸோடும் அங்கிருந்த இருக்கிற ஆலிம்களோடும் மிக நெருக்கமான தொடர்பு இருந்தது. தப்லீக் இஜ்திமாக்களிலும் ஜோடுகளிலும் பெரியார்களின் பயான்களை தமிழில் மிக அழகாக மொழி பெயர்த்த பெருமை அவர்களுக்கிருக்கிறது. 1970 களிலிருந்து பல தடவைகள் இலங்கைக்கு வந்து போயிருக்கிறார்கள். இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் பட்டமளிப்பு விழாக்களில் கலந்து பட்டம் பெற்று வெளியாகும் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நிறையவே புத்திமதிகள் சொல்லியிருக்கிறார்கள். போலித் தவ்ஹீத்வாதத்துக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்தவர்கள். அவர்களிடம் கல்வி கற்ற இலங்கை மாணவர்கள் கிட்டத்தட்ட 40 பேருக்குக் குறையாமல் இருக்கிறார்கள். அழ்ழாஹ்வுடைய கிருபையினால் எல்லோரும் ஹழ்ரத் அவர்களின் துஆவின் பறக்கத்தால் ஏதோ ஒரு வகையில் தீனுக்கு தங்களாலான சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரும் வீண் போகவில்லை. அல் அப்லாக் வல் அவ்காத் கையெழுத்துப் பிரதிகூட இலங்கை மாணவர்களால் எழுதப்பட்டதுதான்.

வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் கனவுகள்என்றொரு நூலை எழுதிக்கொண்டிருந்தார்கள். அது அவர்களின் உளக்கனவுகளை சுமந்து வந்த ஒரு நூல். முழுக்க முழுக்க ஆலிம்களுக்கும் மத்ரஸா நிர்வாகிகளுக்கும் மாணவர்களுக்குமான புத்திமதிகளும் வழிகாட்டல்களும் அடங்கிய மிகச்சிறந்த ஒரு நூல். துரதிஷ்டவசமாக அது எழுதி முடிய முன்பு ஹழ்ரத் அவர்களின் வாழ்வு முடிந்து போனது. அது இப்போது அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கிறது.

யூசுபிய்யா மத்ரஸாவில் எப்போதும் பட்டமளிப்பு விழாவுக்கு மக்கள் திரளாக வருவார்கள். 16-12-2010 ஹிஜ்ரி 1432 முஹர்ரம் பிறை 09 மாலை சூரியன் மறைந்ததிலிருந்து மக்கள் கூட்டங்கூட்டமாக மத்ரஸாவை நோக்கி வர ஆரம்பித்தார்கள். ஆம் மறைந்த சூரியனைப் பார்க்க வந்தார்கள். யூசுபிய்யாவில் பட்டம் கொடுத்தவர் ஜனாஸாஎன்ற பட்டத்தோடு படுத்திருக்கிறார் அதைப் பார்க்க வந்தார்கள். பல வருடங்களாக ஹழ்ரத் அவர்கள் எதிர்பார்த்திருந்த மரணம் இப்போது வந்திருக்கிற. 2001ம் ஆண்டு அவர்கள் பேசிய ஒரு பயானில் இன்னும் பத்து வருடங்களில் யார் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். 2010 டிசம்பரில் நான் இறந்து விட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்?’ என்று பேசினார்கள். கேட்டது போலவே 2010 டிசம்பர் 16ம் திகதி தாஸூஆ நோன்பு மத்ரஸாவில் நோற்றார்கள். நோன்பு துறக்க அல்லாஹ்விடம் சென்று விட்டார்கள்.

இறுதியாக 05-08-2010ல் இலங்கைக்கு வந்துவிட்டுத் திரும்பிச் செல்லும் போது கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பியது இன்று போல் ஞாபகத்தில் இருக்கிறது. அப்போது அவர்கள் இதற்குப் பிறகு இலங்கைக்கு வரமாட்டேன் என்று நினைக்கிறேன் இது எனது இலங்கைக்கான இறுதிப் பயணம்என்றார்கள். (ஹஸ்ரத் அவர்களை கட்டியணைத்தபடியே இல்லை நீங்கள் மீண்டும் இங்கு வருவீர்கள் என்றேன். இல்லை நான் வரமாட்டேன் என்று உறுதியாகவே சொன்னார்கள் சொன்னது போல் மீண்டும் வரவேயில்லை) 14-12-2010ம் திகதி ஹழ்ரத் அவர்களுக்கு பணிவிடை செய்யும் ஒரு மாணவன் விடுமுறை கேட்டிருக்கிறார் அவனிடம் எப்போது வருவாய்?’ என்று கேட்டதற்து அவர் வியாழக்கிழமை என்று பதில் சொல்லி இருக்கிறார். அப்படியானால் வெள்ளிக் கிழமை குளிப்பாட்ட வருவாய்என்று சொல்லியிருக்கிறார்கள். 16-12-2010ம் திகதி வியாழக் கிழமை அதிகாலை நாற்காலியில் அமர்ந்துகொண்டு தஹஜ்ஜுத் தொழுதிருக்கிறார்கள். பலர் தடுத்தும் நோன்பு வைத்திருக்கிறார்கள். வழமைபோல் காலையில் பாடம் நடத்தி இருக்கிறார்கள். மிஷ்காத் பாடத்தில் தொழுகை பற்றிய ஹதீஸை நடத்தும் போது ஒவ்வொரு தொழுகையையும் வாழ்க்கையின் கடைசித் தொழுகை என்று நிதை்துத் தொழவேண்டும்என்று கூறிவிட்டு என்னைப் பார்க்கும் போது இதுதான் கடைசித் தடவை பார்க்கிறேன் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்என்று கூறியபோது மாணவர்கள் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். உடனே நாளை நான் இருப்பேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்என்று கேட்டிருக்கிறார்கள். மாலை 4.30 மணிக்கு இப்தார் நேரம் வந்து விட்டதா?’ என்று கேட்டிருக்கிறார்கள். 4.50 மணிக்கு ஒரு மாணவனிடம் தனது ஆடைகளை துவைக்கக் கொடுத்து விட்டு தேவையில்லை என்று திருப்பி வாங்கி இருக்கிறார்கள். நான் மக்ரிபிற்கு எழுந்திருக்கா விட்டால் எழுப்பி விடுஎன்று குறிவிட்டு உறங்கியவர்கள் எழுந்திருக்கவே இல்லை. எழுப்பிவிட வந்த மாணவன் வெள்ளைத்துணியால் முழமையாகப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த ஒரு ஜனாஸாவையே பார்த்தான்.

ஒரு உளியின் 67 வருடப் பயணம் நிறைவு பெற்றது.

நினைவுகளின் கடைசிப் பக்கத்தில் “13.06.2009ல் 65 வயது பூர்த்தியாக விட்டது. பன்னிரெண்டாம் வயது முதல் قَالَ اللهُ قَالَ رَسُوْلُ اللهِ (அழ்ழாஹ் சொன்னான் - அவனது தூதர் சொன்னார்கள்) என்று சொல்லாத நாட்கள் அநேகமாக இல்லை. அது ஒன்று மட்டுமே மனதுக்கு நிiறுவு தருகிற அம்சம் என்பது தவிர வேறொன்றும் தெரியவில்லை. நடந்த நல்லவைகளெல்லாம் நிஜ நன்மைகளாக மீஸான் தராசுக்கு வர வேண்டும். கேள்வி கணக்கின் போது நல்ல சாட்சிகளாக வேண்டும். ஸிறாதுல் முஸ்தகீமை மின்னலாகக் கடக்க வைத்து اُدْخُلُوْهَا بِسَلاَمٍ آمِنِيْن ''சாந்தியுடனும் அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்" (அல்குர்ஆன் 15: 46) என்று சொல்லப்படும் கூட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற உண்மை ஆசை நிறைவேற துஆவின் கோரிக்கையோடு முடிக்கிறேன். அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வறஸூலுஹூஎன்று புத்தகத்தை முடித்திருக்கிறார்கள். வெள்ளிக் கிழமை பகல் அன்னாரது ஜனாஸா கீரனூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹ் அவர்களது ஆகிறத்து வாழ்வை எல்லா வகையிலும் செழிப்பாக்கி வைப்பானாக! ஆமீன்.