
இன்னொரு மார்க்க அறிஞரை இழந்து நிற்கிறோம்.
சென்ற வருட இறுதியில் (16-12-2010) மௌலானா கலீல் அஹமத் கீரனூரி ஹழ்ரத் அவர்களை இழந்தோம். இந்த வருட இறுதியில் (31-12-2011) நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பன்னூல் ஆசிரியரும், திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும் தமிழகத்தின் மிகப் பெரும் தப்லீக் அறிஞருமான மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ ஹழ்ரத் அவர்களை இழந்து நிற்கிறோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
01.01.2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள்.
இதற்காக தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் ஜாமிஆ பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி கலாசாலையை தலைமையிடமாக கொண்டு 1996 முதல் செயல்படும் ‘ஹைஅத்துஷ் ஷரீய்யா’ என்ற ஷரீஅத் பேரவையில் சிறப்பான முறையில் செயலாற்றி வந்தார்கள் ஹழ்ரத் அவர்கள்.
சன்மார்க்கக் கோட்டையாகிய லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் பட்டம் பெற்று, தப்லீக் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் அவர்கள்.
தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், தப்லீக் இஜ்திமாக்களிலும் ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன. தமிழக மக்களின் இறைநம்பிக்கையை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்.
யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.
ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.
எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
உண்மையில் வழிகெட்ட,சில பித்அத்தான கொள்கைவாதிகளின் கருத்துக்களை ஆதரித்தும் இந்த நிஜாமுத்தீன் மன்பயீ அவர்களின் சிந்தனைகளும்,எழுத்துக்களும் அமைந்திருந்தன.ஜஹ்மிய்யாக்களின் வழிகெட்ட சித்தாந்தமாகிய எல்லாவற்றிலும் அல்லாஹ் உள்ளான்,எல்லாம் அல்லாஹ்வே என்ற ஹுலூல்,அத்வைத சிந்தனை கொண்ட நூல்களையும் இவர் மொழிபெயர்க்க உறுதுணை செய்துள்ளார்..இலங்கையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில தரீக்கா அமைப்புக்களும் இது போன்ற.. பன்றியிலும்,பாலிலும்,எதிலும் அல்லாஹ் உள்ளான்.. என்று குஃப்ரிய்யத்தான கொள்கைகளை முன்வைத்துப் பேசினர்..அவ்வாறு அவர்கள் பேச பிரதான காரணமாயிருந்த இப்னு அரபி போன்றோரின் சித்தாந்தங்களை ஆதரித்து எழுதப்பட்ட சில நூல்களை
ReplyDeleteநிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்த்துள்ளார்.அந்த நூல்களுக்கு சார்பாக வாதங்களையும் முன்வைத்துள்ளார்.
அதில் "மஙானீ" என்ற நூல் குறிப்பிடத்தக்கதாகும். அரபியிலுள்ள இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்களில் நிஜாமுத்தீன் மன்பயீயும் ஒருவர். அந்த "மஙானீ" என்ற நூலில் வரும் சில விடயங்களைப் பார்த்தால், இது ஹுலூலிய மற்றும் அத்வைத கருத்துக்களை தெளிவாக ஆதரிக்கின்றது..அந்த "மஙானீ" யில் வரும் சில விடயங்கள்... //நூர் முஹம்மதியாவிலிருந்தே படைப்புக்கள் உருவானது,அதாவது நூர் முஹம்மதியாவே படைப்புக்களாக்கப் பட்டது..அந்த நூருமுஹம்மது வைப் பற்றி குறிப்பிடும் போது, //
"ஃபைளுன் முகத்தஸுன் என்பது அல்லாஹுத்தஆலாவுடைய ஜமாலும்,ஜலாலும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து அவனுடைய தாத்திலிருந்து ஒளியாக குமிழியிட்டுக்கொண்டிருந்ததாகும்.இது ஹுவிய்யா என்றும்,ஸாரிய்யா என்றும் நூருமுஹம்மது என்றும் கூறப்படும்.ஆகையால் படைப்புக்களில் எந்த ஒன்றும் அவனை விட்டும் நீங்காது.அவை எல்லாவற்றிலும் அவன் இருக்கிறான்." (மஙானீ, பக்கம் 62).
இந்த இடத்தில் படைப்புக்கள் உருவான விதம் பற்றிப் பேசும்போது, அல்லாஹ்வுடைய தாத்திலிருந்துதான் (உள்ளமையில் / அல்லாஹ்வில்) படைப்புக்கள் உருவானது,ஆகவே எல்லாவற்றிலும்,எல்லா படைப்புக்களிலும் அல்லாஹ் உள்ளான்.. என்ற அத்வைத, ஹுலூலிய வழிகெட்ட சிந்தனை தெளிவாக இங்கு சொல்லப்படுகிறது.. மேலும், இது போன்ற கருத்துகளை வரலாற்றில் கூறிய இப்னு அரபி போன்றோரை பெரும் மகானாக சித்தரித்து அவரின் கருத்துக்களை வைத்து பல பாடங்களை இதில் நடாத்தியுள்ளனர். அதிலே இன்னொரு விடயம்தான் , அல்லாஹுத்தஆலா குஃப்ருக்கும், வழிகேட்டிற்கும் உதாரணமாக குர்ஆனில் நமக்கு கூறும் ஃபிர்அவ்னைப் பற்றி இப்னு அரபியின் வழிகெட்ட கூற்று ,அதாவது அந்த ஃபிர்அவ்னின் ஈமான் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அல்லாஹ் தஆலா தெளிவாக சொன்னதன் பிறகும், அந்த இப்னு அரபி ,ஃபிர்அவ்னைப் புகழ்ந்து,அவனை முஸ்லிமாக்கியதை ஆதரித்து இந்த "மஙானீ" யில் எழுதப்பட்டுள்ளது மாபெரும் வழிகெட்ட விசயமாகும்..
“ஃபிர்அவ்னின் ஈமான் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.ஆனால், அவன் பெரும் கொடையாளியாய் இருந்தான், கொடையாளியின் முடிவு தீயதாக ஆகாது என்ற அடிப்படையில் அவனுடைய ஈமான் ஒரு வேளை ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.” [மஙானீ, பக்கம்.576 ] .
ஆகவே, இந்த மஙானீ இது போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணான பல விடயங்கள் காணப்படுகிறது. உண்மையில் நிஜாமுத்தீன் மன்பயீ அவர்களால் சமூகத்தில் சில நல்ல விளைவுகளும் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் இது போன்ற சில வழிகெட்ட கருத்துக்களும்,சிந்தனைகளும் பரவுவதற்கும் அவர் காரணமாக இருந்ததையும் யாராலும் மறுக்க முடியாது.
ஆமாம், உண்மைதான். இவர்களுடன் இருந்த மிக முக்கிய ஆலிம்களில் ஒருவரான சைபுத்தீன் ரசாதி..அண்மையில்,26.08.2012.அன்று T.N.T.J யினருடருடன் தமிழகத்தில் நடந்த விவாத ஒப்பந்தத்தில் இந்த "மஙானீ " என்ற குழப்பமான, வழிகெட்ட கருத்துக்களைக் கொண்ட நூலுக்கு சார்பாக விவாதிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.உண்மையில் தமிழில் உள்ள இது போன்ற நச்சுக் கருத்துக்களைக் கொண்ட நூலுக்கு சார்பாக வாதாடுவது மாபெரும் வழிகேட்டை ஆதரிப்பதாகவே அமையும்!.
Delete